ADDED : ஜூன் 11, 2025 07:53 PM
புவனகிரி; புவனகிரி அருகே பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் திட்டியதால் 16 வயது சிறுமி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி அடுத்த அம்பாள்புரம் பெரிய தெருவை சேர்ந்தவர் சக்திவேல் கூலி தொழிலாளி. இவரது மகள் ரஞ்சனி, 16; பக்கத்து வீட்டு தென்னை மரத்தில் இருந்த மட்டை தங்கள் வீட்டு பகுதியில் சாய்ந்த நிலையில் இருந்தது. இதனால் ரஞ்சனி தென்ன மட்டையை வெட்டியுள்ளார்.
இதை பார்த்த பக்கத்து வீட்டுச் சேர்ந்த உறவினர் பெண் இதனை கண்டித்துள்ளார்.
இதில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரஞ்சனி வீட்டிற்குள் சென்று துாக்கிட்டுக்கொண்டார். உடன் வீட்டில் இருந்த்வர்கள் அவரை மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர்இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்த வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.