ADDED : ஏப் 06, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கட்டியநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் தங்கதுரை, 22; இவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, தங்கதுரையை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.