ADDED : ஏப் 25, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி, கடந்த 23ம் தேதி இரவு சாப்பிட்டு விட்டு, வீட்டின் பின்புறம் சென்றார். நீண்டநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் சூர்யா என்பவர் தனது மகளை பைக்கில் கடத்திச் சென்றதாக அவரது தாய் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சிறுமியையும், வாலிபரையும் தேடி வருகின்றனர்.

