/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமி திருமணம் : 5 பேர் மீது வழக்கு
/
சிறுமி திருமணம் : 5 பேர் மீது வழக்கு
ADDED : நவ 18, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக வாலிபர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
கடலுார், திருவந்திபுரத்தை சேர்ந்தவர் முருகன் மகன் குமரகுரு, 20; இவரும், 17 வயது சிறுமியும் காதலித்தனர். இருவரும் நெருங்கி பழகியதில், சிறுமி 2 மாதம் கர்ப்பம் ஆனார். இதனால், குமரகுருவிற்கு அவரது குடும்பத்தினர் சிறுமியை திருமணம் செய்து வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து குமரகுரு, அவரது தாய் முனியம்மா, ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.