தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறுமியிடம் சீண்டல்; ஆசிரியருக்கு 'காப்பு'  

 சிறுமியிடம் சீண்டல்; ஆசிரியருக்கு 'காப்பு'  

 சிறுமியிடம் சீண்டல்; ஆசிரியருக்கு 'காப்பு'  


ADDED : ஆக 08, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 05:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: ஏழு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் அகஸ்டின், 24, என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம், காடாம்புலியூர் அருகே ஒரு கிராமத்தில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளியில், புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பத்தை சேர்ந்த அகஸ்டின், ஆசிரியராக பணிபுரிகிறார்.

இவர், இரண்டாம் வகுப்பு படிக்கும், 7 வயது சிறுமியிடம், நேற்று முன்தினம் மதியம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமி, நேற்று காலை பெற்றோரிடம் கூறி அழுதார். சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் பள்ளிக்கு சென்று, அகஸ்டினுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

பண்ருட்டி மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, அகஸ்டினை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us