/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ
/
சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ
ADDED : நவ 15, 2025 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 24; இவர் கடந்த ஜூலை மாதம்,17 வயது சிறுமியை திருமணம் செய்தார்.
இந்நிலையில் சிறுமி தற்போது மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து, ஊரக நல அலுவலர் புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

