/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ
/
சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ
ADDED : நவ 17, 2025 01:30 AM
சிதம்பரம்: சிதம்பரம் அருகே, 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் ராஜாராம்,26; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடத்தியுள்ளனர். தற்போது 17 வயதாகும், அச்சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இது குறித்து கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மகளிர் ஊர் நல அலுவலர் ஜெயா, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார், ராஜாராம் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உட்பட, 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

