/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனியார் பஸ் மோதி விபத்து வாலிபர் பலி; குழந்தை உட்பட 2 பேர் காயம்
/
தனியார் பஸ் மோதி விபத்து வாலிபர் பலி; குழந்தை உட்பட 2 பேர் காயம்
தனியார் பஸ் மோதி விபத்து வாலிபர் பலி; குழந்தை உட்பட 2 பேர் காயம்
தனியார் பஸ் மோதி விபத்து வாலிபர் பலி; குழந்தை உட்பட 2 பேர் காயம்
ADDED : நவ 17, 2025 01:31 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தனியார் பஸ் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் பலி மற்றும் தந்தை மகன் படுகாயமடைந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுாரில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேற்று இரவு 7:30 மணியளவி ல், தனியார் பஸ் பயணிகளுடன் வந்தது. அப்போது, விருத்தாசலம் ஸ்டேட் பேங்க் அருகே பஸ் வந்தபோது, எதிரே வந்த பைக் மீது மோதியது.
இதில் பைக்கில் சென்ற வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும், அரசகுழியை சேர்ந்த அசோக், 42, என்பவர் ஓட்டிவந்த பைக் மீதும் பஸ் மோதி நின்றது. இதில், அசோக், மகன் நரேஷ், 4; ஆகிய இருவரும் பலத்த காய மடைந்தனர்.
உடன், தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
மேலும், பலியான வாலிபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்த வாலிபர் சின்னகாப்பன்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் மகன் ராஜபாண்டி, 28; என்.எல்.ஏ., ஒப்பந்த ஊழியர் என்பது தெரிய வந்தது. அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

