/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடும்ப ஓட்டுகளை தாருங்கள்: அ.தி.மு.க., செம்மலை பேச்சு
/
குடும்ப ஓட்டுகளை தாருங்கள்: அ.தி.மு.க., செம்மலை பேச்சு
குடும்ப ஓட்டுகளை தாருங்கள்: அ.தி.மு.க., செம்மலை பேச்சு
குடும்ப ஓட்டுகளை தாருங்கள்: அ.தி.மு.க., செம்மலை பேச்சு
ADDED : டிச 30, 2024 05:55 AM

கடலுார்; என்.எல்.சி., யில் பணியாற்றும் அ.தி.மு.க., தொழிற்சங்க ஊழியர்கள், குடும்ப ஓட்டுகளையும் முழுமையாக பெற்றுத்தர வேண்டும் என, அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் செம்மலை பேசினார்.
என்.எல்.சி., யில் அண்ணா தொழிற்சங்க தேர்தலையொட்டி, விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி நெய்வேலியில் நடந்தது. தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட அமைப்பு செயலாளர் செம்மலை தலைமை தாங்கி தேர்தலுக்கு விருப்ப மனுக்களை பெற்றார். பொறுப்பாளர்களான கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் செம்மலை பேசியதாவது: அண்ணா தொழிற்சங்க தேர்தல், அடுத்து வரும் என்.எல்.சி., யில் அங்கீகாரம் அளிக்கும் மறைமுக தேர்தலுக்கு ஒரு அச்சாரமான தேர்தலாகும்.
இது நமது குடும்ப தேர்தல். மறைமுக தேர்தலில் நாம் பெரும் வெற்றி நமக்கு 2026 சட்டசபை தேர்தலில் பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி சட்டசபை தேர்தல் வெற்றிகளுக்கு உதவும். என்.எல்.சி., யில் பணியாற்றும் தொழிற்சங்க ஊழியர்கள் அனைவரும் தங்கள் ஓட்டுகளை மட்டுமல்லாது, குடும்ப ஒட்டுகளையும் முழுமையாக பெற்று தந்து, பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தொழிற்சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன், இணைசெயலாளர் சூரியமூர்த்தி, ஜெ., பேரவை துணை செயலாளர்கள் சிவசுப்பிரமணியன், பேரவை செயலாளர் வழக்கறிஞர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் கமலக்கண்ணன், வினோத், நகர செயலாளர் பாபு, அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுப்பிரமணியன் பங்கேற்றனர்.