ADDED : ஜூன் 22, 2025 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் அமுதா தலைமை தாங்கினார். முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். ராமலிங்கம், மங்களம் அம்மையார் நினைவு அறக்கட்டளை நிறுவனர்கள் பன்னீர்செல்வம், சுரேஷ்குமார் ஆகியோர் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினர்.
விழாவில், உதவி தலைமை ஆசிரியர் விஜயராகவன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.