/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறுவட்ட விளையாட்டு போட்டி ஞானகுரு வித்யாலயா பள்ளி வெற்றி
/
குறுவட்ட விளையாட்டு போட்டி ஞானகுரு வித்யாலயா பள்ளி வெற்றி
குறுவட்ட விளையாட்டு போட்டி ஞானகுரு வித்யாலயா பள்ளி வெற்றி
குறுவட்ட விளையாட்டு போட்டி ஞானகுரு வித்யாலயா பள்ளி வெற்றி
ADDED : ஆக 07, 2025 02:28 AM

திட்டக்குடி: திட்டக்குடி குறுவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டியில் ஞானகுரு வித்யாலயா பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
திட்டக்குடி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இறையூர் அருணா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா பள்ளி மாணவர்கள் 17 மற்றும் 19வயதுக்குட்பட்டோருக்கான ஹேண்ட் பால் போட்டியில் பங்கேற்றனர். அதில் 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிறுவனர் கோடி, பள்ளி தாளாளர் சிவகிருபா, பள்ளி முதல்வர் அய்யாதுரை ஆகியோர் பாராட்டினர். நிர்வாக அலுவலர் சித்ரா, உடற்கல்வி ஆசிரியை பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.