/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேயர் வீட்டு விசேஷம் பிரியாணி சாப்பிட்டு போங்க... துப்புரவு பணியாளர் போராட்டத்தை கொச்சைப்படுத்திய அதிகாரி

ADDED : செப் 03, 2025 07:28 AM
க டலுார் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரியும் 200க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் போடவில்லை. பி.எப்., என்ன ஆனது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக சில நாட்களுக் கு முன் ஆற்றங்கரை வீதியில் உள்ள சுகாதார அலுவலகத்தில் கடந்த 30 ம் தேதி துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளாளுக்கு ஒரு கேள்வி கேட்ட நிலையில், போராட்டத்தின் உச்சக்கட்டத்தில், அதிகாரி ஒருவர் குறிக்கிட்டு, 'போராட்டத்தை இத்துடன் நிறைவு செய்து கொள்ளுங்கள். மேயர் வீட்டு மணநாளையொட்டி மதியம் கட்சி அலுவலகத்தில் சுடச்சுட பிரியாணி விருந்து போடுகிறார்கள். அங்கே அனைவரும் ஓடிச்சென்று சாப்பிட்டுவிட்டு போங்க, போராட்டத்தை நாளை பார்த்துக் கொள்ளலாம்' என மிகவும் 'அலட்சியமாக' கூறினார்.
அதனால் போராட்டக்காரர்கள் வெகுண்டெழுந்து, 'நாங்கள் என்ன பிரியாணி என்றால் வாய் திறப்பவர்களா... பிரியாணிக்காக அலைபவர்கள் நாங்கள் அல்ல. ஏன் இப்படி போராட்டத்தை கொச்சைப்படுத்து கிறீர்கள்' எனக் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அந்த அதிகாரி அதற்கு மேல் பேசாமல் அங்கிருந்த நழுவினார்.