
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி பவானி வித்யாஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கோகுலாஷ்டமி விழா நடந்தது.
கல்விக்குழும நிறுவன தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் மகாலட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். நிர்வாக அலுவலர் பொன்சடையமுத்து வரவேற்றார். மாணவ, மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.