ADDED : செப் 16, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி உறியடி திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, மாலை வேணுகோபால சுவாமி வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. வீதியுலாவின்போது பல இடங்களில் பக்தர்கள் உறியடித்தனர்.
அபிநயா நாட்டிய குழு மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியும், நளினிகாந்தன் நீலாவதி குழுவினரின் கர்நாடக இசைக் கச்சேரியும் நடந்தது.