/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்வியுடன் நல்ல ஒழுக்கங்களை கற்க வேண்டும்: எஸ்.பி., ஜெயக்குமார் 'அட்வைஸ்'

ADDED : அக் 25, 2025 11:13 PM

சேத்தியாத்தோப்பு: மாணவர்கள் கல்வியுடன் நல்ல ஒழுக்கங்களை கற்க வேண்டும் என எஸ்.பி. ஜெயக்குமார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
வளையமாதேவி வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பள்ளி தாளாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. விஜிகுமார், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலர் விவேக்ராம் வரவேற்றார்.
கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
மாணவர்கள் ஆசிரியர்கள் சிறந்த ஒழுங்கங்களை பின்பற்ற வேண்டும். மாணவர்கள் கல்வி கற்றால் மட்டும் போதாது. சிறந்த ஒழுக்கங்கள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், வேற்றுமையின்றி பாகுபாடின்றி இருத்தல் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மது, குட்கா, சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துக்களில் சிக்கி கொள்ளாமல் கவனமாக இருந்து நன்கு படித்து புகழினை உருவாக்கி கொள்ள வேண்டும். அதுபோல், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், படிப்பில் சிறந்து விளங்க உறுதுணையாக இருக்க வேண்டும் என பேசினார்.