/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கலைக்கல்லுாரி ஆடிட்டோரியம் ரூ.2.50 கோடியில் அமைக்க திட்டம்
/
அரசு கலைக்கல்லுாரி ஆடிட்டோரியம் ரூ.2.50 கோடியில் அமைக்க திட்டம்
அரசு கலைக்கல்லுாரி ஆடிட்டோரியம் ரூ.2.50 கோடியில் அமைக்க திட்டம்
அரசு கலைக்கல்லுாரி ஆடிட்டோரியம் ரூ.2.50 கோடியில் அமைக்க திட்டம்
ADDED : டிச 18, 2024 07:37 AM
கடலுார் : கடலுார் அரசு கலைக்கல்லுாரியில், ரூ.2.50 கோடியில் ஆடிட்டோரியம் அமைப்பதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
கடலுார் தேவனாம்பட்டினத்தில் அரசு பெரியார் கலைக்கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரியில், தமிழ், ஆங்கிலம், வரலாறு உள்ளிட்ட 17 இளங்கலை பாடப்பிரிவுகளும், 11 முதுகலைப் பாடப்பிரிவுகளும் உள்ளது. இங்கு, இரண்டு சுழற்சிகளாக நடைபெறும் வகுப்புகளில் கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்கல்லுாரியில் ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அதிநவீன ஆடிட்டோரியம் அமைக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. நெய்வேலி என்.எல்.சி., நிர்வாகம் சார்பில் சி.எஸ்.ஆர்., நிதியில் 2.50 கோடி ரூபாயில், ஆடிட்டோரியம் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக, கல்லுாரி எதிரில் உள்ள கல்லுாரிக்கு சொந்தமான காலி இடத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் துவங்கப்படவுள்ளது.