/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கல்லுாரி மாணவருக்கு சிறந்த வீரருக்கான பரிசு
/
அரசு கல்லுாரி மாணவருக்கு சிறந்த வீரருக்கான பரிசு
ADDED : டிச 12, 2024 08:00 AM
சிதம்பரம்; மாவட்ட அளவிலான, கபடி ஜூனியர் பிரிவிற்கான அணி தேர்வு கடலுாரில் நடந்தது. அதில், காட்டுமன்னார்கோவில் அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள், வேல்முருகன், நிதிஷ்குமார், சரண் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், வேலுாரில் நடந்த தமிழக அளவிலான கபடி ஜூனியர் பிரிவு போட்டியில் பங்கேற்று விளையாடினர். இதில் கடலுார் மாவட்ட அணி இரண்டாம் இடம் பெற்றது.
இதில் விளையாடியதன் மூலம், தமிழகத்தின் சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசை காட்டுமன்னார்கோவில் அரசு கல்லுாரி மாணவர் வேல்முருகன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர் வேல்முருகனை கல்லுாரி முதல்வர் மீனா, உடற்கல்வித்துறை இயக்குனர் சரவணன், பயிற்சியாளர் கோகுல் பாராட்டினர்.

