/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசுக்கல்லுாரி மாணவர்கள் போராட்டம்
/
அரசுக்கல்லுாரி மாணவர்கள் போராட்டம்
ADDED : ஜன 01, 2026 06:14 AM

கடலுார்: கடலுார் பெரியார் அரசுக்கல்லுாரி மாணவர்கள், கட்டண உயர்வை கண்டித்து இரண்டாம் நாளாக வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து அரசு கல்லுாரிகளிலும் தேர்வுக்கட்டணம், மறு மதிப்பீடு, சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதைக்கண்டித்து நேற்று முன்தினம் கடலுார் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லுாரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இரண்டாம் நாளாக, கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கிளை செயலாளர் சரவணன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

