/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரதநாட்டிய மாணவிகளுக்கு பரிசு வழங்கல்
/
பரதநாட்டிய மாணவிகளுக்கு பரிசு வழங்கல்
ADDED : ஜன 01, 2026 06:14 AM

கடலுார்: கடலுாரில் அன்னை சுப்பம்மாள் நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் சலங்கை பூஜை மற்றும் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.
அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பரதநாட்டியம் மற்றும் சலங்கை பூஜை அரங்கேற்றம் நிகழ்த்திய மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். மேயர் சுந்தரி, மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, அரிஸ்டோ பப்ளிக் பள்ளி சேர்மன் சிவக்குமார், வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். சுஜாதா மோகன் சிறப்பு விருந்தினராக க லந்து கொண்டு பேசினார். டாக்டர் செந்தில்குமார் வாழ்த்தி பேசினார். விழாவில், பரதநாட்டிய மாணவிகள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர். நாட்டிய பள்ளி நிறுவனர் தியாகராஜன் நன்றி கூறினார்.

