/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கட்டுமான பணிகள் : கலெக்டர் ஆய்வு
/
அரசு கட்டுமான பணிகள் : கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 15, 2025 11:14 PM

-குறிஞ்சிப்பாடி: அரசு சார்பில் நடைபெறும் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூவாணிக்குப்பம் மற்றும், ரங்கநாதபுரம் ஊராட்சிகளில் நடைபெறும் அரசு கட்டுமான பணிகளை கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது கலெக்டர் கூறியதாவது:
சமத்துவபுரம் குடியிருப்புகளுக்கு மின், சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை அம்சங்களுடன், இட வசதி, போதிய காற்றோட்ட வசதியுடன் கூடிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
பூவாணிக்குப்பம் பகுதியில் ரூ.,6.78 கோடி மதிப்பில், 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம், நுழைவாயில் மற்றும், பெரியார் சிலை பணிகள் நடந்து வருகிறது. அதே போல ரங்கநாதபுரம் ஊராட்சி மேட்டுவெளி பகுதியில், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், ரூ.,8.3 கோடி மதிப்பில், 300 சதுர அடி அளவில் மொத்தம், 166 வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது, என்று கூறினார்.
ஆய்வின் போது, செயற்பொறியாளர் வரதராஜ பெருமாள், பிடிஓ.,க்கள் வெங்கடேசன், ராமச்சந்திரன், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.