/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பணியாளர் சங்கம் சாலை மறியல் அறிவிப்பு
/
அரசு பணியாளர் சங்கம் சாலை மறியல் அறிவிப்பு
ADDED : ஏப் 26, 2025 06:21 AM
கடலுார் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28ம் தேதி சாலை மறியல் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கை:
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட சரண் விடுப்பு ஊதியம், அகவிலைப்படியை மீண்டும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
அகவிலைப்படி வழங்குவதில் உள்ள பாகுபாடுகளை களைய வேண்டும். பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28ம் தேதி, விழுப்புரம், திருச்சி, மதுரையில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.