/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் அரசு விழா: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
/
சிதம்பரத்தில் அரசு விழா: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
சிதம்பரத்தில் அரசு விழா: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
சிதம்பரத்தில் அரசு விழா: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
ADDED : ஜூலை 15, 2025 10:47 PM

சிதம்பரம்; சிதம்பரத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில், காமராஜர் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். தனியார் திருமண மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை துவக்கி வைத்து துறை சார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு, மனுதாரர்களுடன் கலந்துரையாடினார்.
சிதம்பரம், பேட்டை பகுதியில் புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கர் சிலையையும், சிதம்பரம் பைபாஸ் சாலையில், முன்னாள் எம்.பி., இளையபெருமாள் சிலையுடன் கூடிய நுாற்றாண்டு அரங்கையும் திறந்து வைத்து பேசினார்.
விழாவில், தலைமை செயலாளர் முருகானந்தம், அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், வேலு, கணேசன், சாமிநாதன், மாநில காங்., தலைவர் செல்வபெருந்தகை, மா.கம்யூ., கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அகில இந்திய தலைவர் காதர்மொய்தீன், முன்னாள் காங்., தலைவர் அழகிரி, எம்.பி., க்கள் ரவிக்குமார், விஷ்ணுபிரசாத், எம்.எல்.ஏ., க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், சிந்தனைச் செல்வன், ராதாகிருஷ்ணன், வேல்முருகன், சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், இன்ஜினியர் அணி அப்பு சந்திரசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், பேரூராட்சி தலைவர்கள் அண்ணாமலை நகர் பழனி, காட்டுமன்னார்கோவில் கணேசமூர்த்தி, பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர், கிள்ளை நகர செயலாளர் மற்றும் பேரூராட்சி துணை சேர்மன் கிள்ளை ரவீந்திரன், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் நல்லதம்பி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர், துணை சேர்மன் முகமது யூனுஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.