/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளி கட்டடப் பணி : சேர்மன் ஆய்வு
/
அரசு பள்ளி கட்டடப் பணி : சேர்மன் ஆய்வு
ADDED : நவ 23, 2025 06:19 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை கும்மத்பள்ளி தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 74 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் பள்ளி கட்டட பணியை நேற்று சேர்மன் தேன்மொழி சங்கர் ஆய்வு செய்தார்.
பரங்கிப்பேட்டை கும்மத்பள்ளி தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போதுமான கட்டட வசதி இல்லாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
மாணவர்கள் நலன்கருதி, புதிய பள்ளி கட்டடம் கட்டித்தரக்கோரி பொதுமக்கள் தரப்பில், வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில், பொது நிதியில் இருந்து, 74 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதியதாக பள்ளி கட்டடம் கட்டும்பணி நடந்து வருகிறது. இப்பணியை நேற்று பேரூராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன், முன்னாள் துணை சேர்மன் செழியன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், கவுன்சிலர் பசிரியாமா ஜாபர் அலி, ஒன்றிய பிரதிநிதி ஹபிபுர் ரஹ்மான், அப்துல் பாசித் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

