/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய தடகள போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தகுதி
/
தேசிய தடகள போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தகுதி
ADDED : டிச 25, 2024 10:55 PM

விருத்தாசலம்; காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் பாரத் ஸ்பெஷல் ஒலிம்பிக் சார்பில், மாநில அளவிலான தடகள போட்டி நடந்தது.
இதில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி பிளஸ் 1 படிக்கும் மாற்றுத்திறன் மாணவர் கவிநிலவன் கலந்துகொண்டு, குண்டு எறிதல் போட்டியில் 13.7 மீட்டர் எறிந்து, மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
இதனால், அவர் தேசிய அளவில் நடக்கும் தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். போட்டியின் வென்ற மாணவனை, ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் பாராட்டினார். மாவட்ட அளவில் உள்ள ஸ்பெஷல் ஒலிம்பிக் தலைவர் குமார், சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர் இளவரசன், பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சிவகுமார் மற்றும் மாணவனின் பெற்றோர் வேலுமணி உடனிருந்தனர்.