/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனித்திறன் போட்டிகளில் சாதனை படைக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
/
தனித்திறன் போட்டிகளில் சாதனை படைக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
தனித்திறன் போட்டிகளில் சாதனை படைக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
தனித்திறன் போட்டிகளில் சாதனை படைக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
ADDED : டிச 19, 2024 06:51 AM
வேப்பூர்; கீழக்கல்பூண்டி படிக்கும் மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான தனித்திறன் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் ஆண்டுதோறும் தொடர்ந்து வெற்றி சாதனை படைத்து வருகின்றனர்.
தனித்திறன் மாவட்ட அளவிலான கோல் ஊன்றி தாண்டுதலில், இப்பள்ளி மாணவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக வெற்றி பெற்றனர். நடப்பாண்டில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில், மாணவர்கள் வீரவளவன், அரிகரன், கமலாவதி வெற்றி பெற்று சாதனை படைத்தனர். மேலும், மாநில அளவிலான 17 வயது, 19 வயதுக்குட்பட்டோருக்கான கோல் ஊன்றி தாண்டுதலில், மாணவர் வீரவளவன் பங்கேற்றார்.
நடப்பாண்டில் நடந்த மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை கைப்பந்து போட்டியில், மாணவிகள் வெற்றி பெற்று, ரூ. 42 ஆயிரம் பரிசுத்தொகை பெற்றனர். மேலும், முதல்வர் கோப்பை கைப்பந்து மாநில போட்டிக்கு, 4 மாணவிகள், 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 14 வயதுக்குட்பட்டோரில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
தனித்திறன் மற்றும் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்கும் அரசு பள்ளியில், முறையான விளையாட்டு மைதானம் மற்றும் உபகரணங்கள் இல்லை. இதனால், மாணவர்கள் சரியாக பயிற்சி பெற முடியவில்லையென கவலை தெரிவித்தனர்.
மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகயிலுள்ள அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைக்க அவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரங்களை வழங்க மாவட்ட நிர்வாகிகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.