/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்துறை அதிகாரிகளை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் பயிற்றுனர் கைது
/
மின்துறை அதிகாரிகளை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் பயிற்றுனர் கைது
மின்துறை அதிகாரிகளை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் பயிற்றுனர் கைது
மின்துறை அதிகாரிகளை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் பயிற்றுனர் கைது
ADDED : நவ 01, 2025 02:18 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், மின் துறை அதிகாரிகளை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் பயிற்றுனரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில், நேற்று முன்தினம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்து.
இதில், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். மாலை 5:00 மணியளவில் அங்கு வந்த அதேபகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் பயிற்றுனர் சண்முகம், 42; இளமின் பொறியாளர் விஸ்வாதனிடம், நீங்கள்தானே மின் துறை அதிகாரி என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கினார். தடுத்த உதவி செயற் பொறியாளர் வினோத்குமார் என்பவரையும் திட்டி, தாக்கினார்.
இதுகுறித்த புகாரின் பேரில், சண்முகம் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.