/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ேஷர் ஆட்டோ மீது வேன் மோதி பெண் பலி
/
ேஷர் ஆட்டோ மீது வேன் மோதி பெண் பலி
ADDED : நவ 01, 2025 02:18 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் ேஷர் ஆட்டோ மீது சரக்கு வேன் மோதியதில் பெண் இறந்தார்.
பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் விஜயசங்கர், 45; மேல்பட்டாம்பாக்கத்தில் பிரிண்டிங் பிரஸ்சில் வேலை செய்கிறார்.
இவரது மனைவி ராஜஸ்ரீ, 42; இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று ேஷர் ஆட்டோவில் கடலுார் மருத்துவ மனைக்குச் சென்றார்.
நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி அருகே வந்தபோது, எதிரே வாழக்காய் லோடு ஏற்றி வந்த டாடா ஏஸ் சரக்கு வேன், ேஷர் ஆட்டோவின் பக்கவாட்டில் மோதியது.
இதில் ேஷர் ஆட்டோவில் பின்னால் ஓரமாக அமர்ந்து வந்த ராஜஸ்ரீ தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்த ராஜஸ்ரீக்கு 5 மற்றும் 2 வயதில் மகன்கள் உள்ளனர்.
விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

