
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.சீயோன் பள்ளியில் விளையாட்டு தின விழா போட்டிகள் நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தாளாளர் சாமுவேல் சுஜின், நிர்வாக இயக்குனர் தீபா சுஜின் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ, மாணவிகள் 2000க்கும் மேற்பட்டோர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
சேத்தியாத்தோப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். பள்ளி விளையாட்டுத்துறை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை பாராட்டினர்.

