ADDED : நவ 01, 2025 02:26 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நிலத்தகராறில், தாய், மகனைத் தாக்கிய 4 பேரை கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த மேலப்பாளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல், 32; இவர், கடந்த 26ம் தேதி தனது தாய் பூபதியுடன், வயலுக்கு சென்றார். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் சிவா, சின்னதுரை, சகோதரர்கள் ராஜாங்கம், தியாகராஜன், ராஜாங்கம் மகன் கவியரசன் ஆகியோர், குமரவேல் நிலத்தில் இருந்த கம்பிவேலி மற்றும் அத்து கல்லை பிடுங்கி எறிந்தனர்.
இதனால், இருதரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சிவா, சின்னதுரை ஆகியோர் குமரவேல், பூபதி ஆகிய இருவரையும் திட்டி தாக்கி, கொலை மிரட் டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சிவா, சின்னதுரை உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து, சின்னதுரை, ராஜாங்கம், தியாகராஜன், கவியரசன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

