/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறுவட்ட விளையாட்டு போட்டி அரசு பள்ளி முதலிடம்
/
குறுவட்ட விளையாட்டு போட்டி அரசு பள்ளி முதலிடம்
ADDED : ஆக 10, 2025 08:34 AM

நடுவீரப்பட்டு : பண்ருட்டி குறுவட்ட விளையாட்டு போட்டியில் பத்திரக்கோட்டை அரசு பள்ளி கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்தது.
பண்ருட்டி அடுத்த கொள்ளுக்காரன்குட்டை வள்ளலார் மெட்ரிக் பள்ளியில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கைப்பந்து போட்டியில் பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர். இதன் மூலமாக மாவட்ட அளவில் நடக்கும் கைப்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை மீனாம்பிகை, உடற்கல்வி ஆசிரியர் இம்ரான் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் 14 வயதுக்குட்பட்ட பிரிவு கைப்பந்து போட்டியில் இரண்டாமிடம் பிடித்தனர். இவர்களை தலைமை ஆசிரியர் வெற்றிவேல் பாராட்டினார்.