/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேப்பூரில் அரசு டவுன் பஸ் அமைச்சர் துவக்கி வைப்பு
/
வேப்பூரில் அரசு டவுன் பஸ் அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : அக் 28, 2024 05:33 AM

வேப்பூ : வேப்பூர் பகுதியில் பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, வேப்பூர் - திட்டக்குடி வரை புதிய வழித்தடத்தில் (தடம் எண் 12) மகளிர் கட்டணமில்லா அரசு டவுன் பஸ்சை இயக்கும் துவக்க நிகழ்ச்சி வேப்பூர் பஸ் நிலையத்தில் நடந்தது.
நல்லுார் தி.மு.க., ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினார். விருத்தாசலம் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சப் கலெக்டர் சையத் முகம்மது, வேப்பூர் தாசில்தார் மணிகண்டன், போக்குவரத்து பொது மேலாளர் பரிமளம், மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் கணேசன் பங்கேற்று, கொடியசைத்து துவக்கி வைத்தார். நல்லுார் தி.மு.க., ஒன்றிய துணைச் செயலர்கள் அன்புக்குமரன், மாரிமுத்தாள் குணா, பொருளாளர் வெங்கடாசலம், இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர்கள் பாபு, குணா, தனசேகர், தி.மு.க., நிர்வாகிகள் ரகுநாதன், மாரிமுத்து, கவுன்சிலர் முத்துக்கண்ணு, ஊராட்சி தலைவர்கள் மகேஸ்வரி, மஞ்சுளா, நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும், பூலாம்பாடி கிராமத்தில் ஊராட்சி தலைவர் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
சேதமடைந்த பஸ்
வேப்பூர் - திட்டக்குடி வரை அரசு டவுன் பஸ்சை அமைச்சர் துவக்கி வைத்தார். பஸ்சில், முன்புற சக்கரத்தின் மேல் பலகை பெயர்ந்தும், பக்கவாட்டு தகரம் உடைந்துள்ளது. இதனை, வைத்து துவக்க விழா நடத்தியுள்ளனர்.