/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் போராட்டம்
/
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் போராட்டம்
ADDED : ஆக 18, 2025 11:48 PM

கடலுார்; கடலுார் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யூ., போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் முருகன், பொருளாளர் அரும்பாலன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு துணைத் தலைவர் சுந்தரராஜன், துணை செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் பழனிவேலு முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யூ., மாவட்டசெயலாளர் பழனிவேல் போராட்டத்தை துவக்கி வைத்தார்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு பணி ஓய்வின் போதே பணப்பலன்கள் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

