/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கல்லுாரியில் சேர உதவி மையம் துவக்கம்
/
அரசு கல்லுாரியில் சேர உதவி மையம் துவக்கம்
ADDED : மே 20, 2025 06:25 AM
திட்டக்குடி : திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2025-26ம் ஆண்டு சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பத்திற்கான உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) மணிகண்டன் செய்திக்குறிப்பு:
திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடப்பாண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு துவங்கி உள்ளது. இங்கு, இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடப்பிரிவு சேர்க்கைக்கு வரும் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அதில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி., இளம் அறிவியல், கணிதம், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல், விலங்கியல், பி.சி.ஏ., கணினி பயன்பாட்டியல், பி.காம்., பி.காம்., (சி.ஏ) ஆகிய பாடங்களுக்கு விண்ணப்பப் பதிவு நடந்து வருகிறது. மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாத மாணவ, மாணவிகள் தங்களின் மாற்று சான்றிதழ், பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி பாஸ் புக் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள் 5, போட்டோ-5 ஆகியவற்றுடன் கல்லுாரி உதவி மையத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு, கல்லுாரி வளாகத்தில் செயல்படும் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.