ADDED : பிப் 10, 2024 05:44 AM
நடுவீரப்பட்டு: பாலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அன்னபூரணி தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வராஜ்,பள்ளிமேலாண்மைக்குழுத் தலைவர் மாலதி முன்னிலை வகித்தனர்.முதுகலை ஆசிரியர் காயத்திரி வழவேற்றார்.
விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்க பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் கடந்த கல்வி ஆண்டில் முதன்மை இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட கருவூல அதிகாரி நடராஜன், விழுப்பரம் மருத்துவக்கல்லுாரி நிர்வாக அலுவலர் சிங்காரம், தொலைதொடர்பு துறை கணக்கு மற்றும் நிதி அலுவலர் சங்க சாந்தகுமார், அசோகன், பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் நலச்சங்க துணை பொதுசெயலாளர் ஜெயராமன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அலுவலக கண்காணிப்பாளர் சம்பத், கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.