ADDED : பிப் 28, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர்: வேப்பூர் அடுத்த சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை சுமதி தலைமை தாங்கினார். உதவி மாவட்ட கவுன்சிலர் சுப்ரமணியன், ஆசிரியர் தஜ்முல் உசேன், ஊராட்சி துணைத் தலைவர் புண்ணியமூர்தி முன்னிலை வகித்தனர். ஆசிரியை கலைவாணி வரவேற்றார்.
பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி, சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

