ADDED : மார் 18, 2024 04:06 AM

பரங்கிப்பேட்டை, :  பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியர் முருகனுக்கு பாராட்டு விழா நடந்தது.
பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர் உமா ராணி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் கந்தசாமி முன்னிலை வகித்தார். ஆசிரியை கலையரசி வரவேற்றார்.
கொத்தட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரங்க சாமி, ஊராட்சி துணை தலைவர் விஜய ராஜா, மேலாண்மை குழு தலைவர் மவுனிசா ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியர் முருகனை பாராட்டி பேசினர்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் காயத்ரி, ஆசிரிய பயிற்றுநர் ஷீலா, தலைமை ஆசிரியர்கள் கயல்விழி, சாந்தி, மான்விழி, லட்சுமண், ராஜூ, மோத்தி பேகம், விஜயலட்சுமி விக்டர், வெங்கட்ராமன், சம்பத், ராஜ்குமார், பிரசன்னா வில்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சத்துணவு அமைப்பாளர் தையல்நாயகி நன்றி கூறினார்.

