/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : அக் 28, 2025 05:59 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், திருவள்ளுவர் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 2013 - 18, 2019 - 20, 2021 - 2022ம் கல்வியாண்டுகளில் படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது.
டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
விஷ்ணு பிரசாத் எம்.பி., ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் முனியன் வரவேற்றார்.
அமைச்சர்கள் செழியன், கணேசன், சென்னை பல்கலை., துணைவேந்தர் குழு உறுப்பினர் ஆம்ஸ்ட்ராங், வேலுார் திருவள்ளுவர் பல்கலை., பதிவாளர் செந்தில்வேல்முருகன், தஞ்சை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் குணசேகரன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்ற மாணவிகள் தமிழரசி, ஹரிணி உட்பட 1,556 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினர்.
தேர்வு கட்டுப்பாட்டாளர் பாபு ஜனார்த்தனன், திருவாரூர் மத்திய பல்கலை., பதிவாளர் திருமுருகன், சென்னை லேடி வெலிங்டன் கல்லுாரி முன்னாள் முதல்வர் செல்வ முத்துக்குமாரசாமி, சிதம்பரம் பல்லை., துணைவேந்தர் குழு உறுப்பினர் அறிவுடைநம்பி, பதிவாளர் பிரகாஷ், தேர்வு கட்டுப்பாளர் குமார், இணை தேர்வு கட்டுப்பாட்டாளர் பிரபாகர், தாசில்தார் அரவிந்தன் உட்பட துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், விரைவுரையாளர்கள் பங்கேற்றனர்.
இன்று (28ம் தேதி), நாளை (29ம் தேதி) என மூன்று நாட்கள் நடக்கும் பட்டமளிப்பு விழாவில், மொத்தமாக 4,182 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்.

