/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை
/
பாடலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை
ADDED : அக் 28, 2025 05:58 AM

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டியையொட்டி நேற்று முன்தினம் சக்திவேல் வாங்கும் உற்சவம் நடந்தது. நேற்று காலை வள்ளி தேவசேனா சமேத முருகருக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து நாகராஜ் குருக்கள் தலைமையில் பூஜை நடந்தது.
மூலமந்திரம், வேத மந்திரம், சத்ரு சம்ஹார திரிசதி ேஹாமம், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. புனித நீர் அடங்கிய கலசங்கள் ஆலயத்தை வலம் வந்து வள்ளி தேவசேனா சமேத முருகருக்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, லட்சார்ச்னை நடந்தது.
உபயதாரர் கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ், சக்ராலயா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கோமதி துரைராஜ், டாக்டர் கணபதி, முன்னாள் சேர்மன் சுப்ரமணியன், பாடலி சங்கர் உட்பட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு சூரசம்ஹாரம் நடந்தது.

