/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு
/
கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு
ADDED : ஏப் 28, 2025 05:54 AM

கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல், கலை மற்றும் மேலாண்மையியல் கல்லுாரியில் 13வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். முதல்வர் நிர்மலா பட்டமளிப்பு விழா அறிக்கை வாசித்தார். திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாபுஜனார்த்தனம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 1,110 மாணவிகளுக்கு பட்டம், பல்கலைக்கழக தர வரிசையில் முன்னுரிமை பெற்ற ஒன்பது மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கினார்.
துறை வாரியாக முன்னுரிமை பெற்ற 25மாணவிகளுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி முதன்மை செயல் இயக்குனர் டாக்டர் கண்ணன், கிருஷ்ணசாமி ரெட்டியார் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் பிரதீப்ராஜ், அண்ணாமலை பல்கலைக்கழக துணை இயக்குனர் சிவகுருநாதன், அண்ணாமலை பல்கலைக்கழக பிரதிநிதி ராமலிங்கம், கல்லுாரி நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன் பேசினர்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஹேமலதா, சிவசக்தி, பிரியா, அருந்ததி செய்திருந்தனர்.
பூர்ணிமா நன்றி கூறினார்.