/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் பட்டமளிப்பு
/
வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் பட்டமளிப்பு
ADDED : ஜன 25, 2025 02:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கான மாறுவேடப் போட்டி மற்றும் பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கி, மழலை கல்வி முடித்து, தொடக்கப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். தாளாளர் இந்துமதி சீனிவாசன், உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். விழாவில், சிறப்பாக வேடமணிந்து பேசிய மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.