
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: கீழக்குப்பம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கலந்து கொண்டார்.
பண்ருட்டி அடுத்த கீழக்குப்பம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை பி.டி.ஓ.,க்கள் மீராகோமதி, பாபு வரவேற்றனர். ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஷபானாஆஸ்மி முன்னிலை வகித்தார்.
கலெக்டர் சிபிஆதித்யாசெந்தில்குமார் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார். இதில் பொதுமக்கள் தரப்பில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றிட வேண்டும்; புதிய சாலை, விளையாட்டு மைதானம் அமைத்து தரவேண்டும்; என கோரிக்கை விடுத்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

