/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கர்ப்பிணி தற்கொலை பண்ருட்டி அருகே பரிதாபம்
/
கர்ப்பிணி தற்கொலை பண்ருட்டி அருகே பரிதாபம்
ADDED : நவ 02, 2025 04:10 AM
பண்ருட்டி: மொபைல் போனில் பேசியதை கண்டித்த தால், கர்ப்பிணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அடுத்த முத்து கிருஷ்ணாபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்மணி. தனியார் ஊழியர். இவரது மனைவி ஸ்ரீமதி, 22; இவர்களுக்கு கடந்த, 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், ஸ்ரீமதி 5 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
நேற்று முன்தினம் ஸ்ரீமதி மொபைல் போனில் பேசியதை அருள்மணி கண்டித்தார். இதனால் கோபம் அடைந்தவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து அவரது உடல், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ஸ்ரீமதி தாயார் சாந்தி, 50; புகார் அளித்தார். போலீசார், சந்தேக மரணம் வழக்கு பதிந் து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக, ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.

