/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு
/
மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு
ADDED : பிப் 17, 2025 01:53 AM
விருத்தாசலம்,: விருத்தாசலத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி, அரை பவுன் நகையை திருடிச் சென்ற புர்கா அணிந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பாவாடை மனைவி முத்தம்மாள், 70. இவர் வீட்டில் தனியார் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு 8:00 மணியளவில் தனியாக இருந்தார். அப்போது, புர்கா அணிந்து வந்த பெண் ஒருவர், அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். தண்ணீர் எடுக்க மூதாட்டி உள்ளே சென்றார்.
அவரை பின் தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற அந்த பெண், மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த அரை பவுன் தோட்டை பறித்துச் சென்றார். மேலும், மூதாட்டியின் கையில் கத்தியால் கிழித்தார்.
இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.