UPDATED : அக் 31, 2026 03:26 PM
ADDED : அக் 31, 2026 03:24 PM

அ நிறம் | அளவு
வேப்பூர்: வேப்பூர் பிரைம் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாத்தா-பாட்டிகள் தின விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி அறங்காவலர்கள் தீபன், கனிமொழி, முதல்வர் ரோஷினி, ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், மாணவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், குடும்பத்தில் மூத்த தலைமுறையினரின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
