ADDED : ஏப் 12, 2025 10:12 PM

கடலுார்: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் கடலுார் சிக்னலில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சிக்னல்களில் காத்திருக்கும் 2 சக்கர வாகன ஓட்டிகள் சுட்டெரிக்கும் வெயிலால் கடும் அவதியடைந்து வருகின்றனர். கோடை வெயிலை சமாளிக்க சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கும் செலவை சம்பந்தப்பட்ட அரசு துறைகள் ஏற்றுள்ளன.
கடலுார் நகரில் 4 சிக்னல்கள் உள்ளன. சிக்னல்களில் ரெட் சிக்னல் விழுந்து விட்டால் அதிகபட்சமாக ஒரு நிமிடம் முதல் 2 நிமிடம் கொளுத்தும் வெயிலில் நிற்க வேண்டியுள்ளது. இப்பிரச்னையை சமாளிக்க கடலுார் மாநகரில் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, கடலுார் பாரதி சாலை சிக்னலில் தனியார் பங்களிப்புடன் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.