/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பசுமை கிராமம் திட்டம் துவக்க விழா
/
பசுமை கிராமம் திட்டம் துவக்க விழா
ADDED : ஜன 29, 2024 08:28 AM

கடலுார் : நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு, ஊராட்சி தலைவர்கள் சார்பில், 42 ஊராட்சிகளில் 'பசுமை கிராமம்' திட்டம் துவக்க விழா கடலுாரில் நடந்தது.
கடலுார் மாவட்டத்தில் துாய்மை போகி சுவிட்ச் பாரத் மிஷன் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 42 ஊராட்சிகள் தேர்வு செய்து, கலெக்டர் அருண்தம்புராஜ் பரிசு வழங்கினார்.
இந்த ஊராட்சிகளில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் ஊராட்சி தலைவர்கள் இணைந்து 'பசுமை கிராமம்' உருவாக்கும் திட்டம் துவக்க விழா கடலுார் டவுன்ஹாலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வக்கீல் சிவமணி தலைமை தாங்கினார்.
பொதுநல அமைப்பு மருதவாணன், ஆடிட்டர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். அமைப்பு தலைவர் வேலுமணி வரவேற்றார்.
விழாவில் கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, பசுமை கிராமம் திட்டத்தையும், இணை இயக்குனர் அமுதவல்லி என்.எஸ்.எஸ்., மாவட்ட அலுவலர் திருமுகம் எழுதிய நுாலை வெளியிட்டு, சென்னையில் இருந்து காணொலி மூலம் துவக்கி வைத்தனர். சுவிட்ச் பாரத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 42 கிராம ஊராட்சி தலைவர்கள் கவுரவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. பசுமை கிராமம் துவக்க நிகழ்ச்சியாக கிராமங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பொது நல அமைப்பு நிர்வாகிகள் சேகர், எழில்குமார், அருட்தந்தை நசியான் கிரகோரி, சகாயராஜா, டாக்டர் இளந்திரையன், ஹரிபாஸ்கர், கோபால், வெங்கடேசன், பீட்டர் அந்தோணிசாமி, சண்முகம், செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.