/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிள்ளை பேரூராட்சியில் இருளர் மக்களிடம் குறைகேட்பு
/
கிள்ளை பேரூராட்சியில் இருளர் மக்களிடம் குறைகேட்பு
ADDED : ஜன 19, 2025 06:23 AM

கிள்ளை: கிள்ளை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் இருளர் மக்களின் குறைகளை, தமிழக அரசு பழங்குடியினர் இயக்குநர்அண்ணாதுரை கேட்டறிந்தார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை கிள்ளைபகுதியில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்களோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். தொடர்ந்து,எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், எம்.ஜி.ஆர்., நகர், தளபதி நகர் மற்றும் சிசில்நகர் பழங்குடி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.நிகழ்ச்சிக்கு, சேர்மன் மல்லிகா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் குமரவேல் வரவேற்றார். துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன், இருளர் மக்களுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லும் பாதை, மனைப்பட்டா, தொகுப்புவீடுகள், மான்யத்துடன் மீன்பிடி சாதனங்களுடன் படகுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.
நிகழ்ச்சியில், கிராம தலைவர் செஞ்சி, செல்லப்பன், கண்ணன், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.