/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழில்துறையில் புரட்சி ஏற்படுத்தும் ஜி.ஆர்.கே., எஸ்டேட் நிறுவனங்கள்
/
தொழில்துறையில் புரட்சி ஏற்படுத்தும் ஜி.ஆர்.கே., எஸ்டேட் நிறுவனங்கள்
தொழில்துறையில் புரட்சி ஏற்படுத்தும் ஜி.ஆர்.கே., எஸ்டேட் நிறுவனங்கள்
தொழில்துறையில் புரட்சி ஏற்படுத்தும் ஜி.ஆர்.கே., எஸ்டேட் நிறுவனங்கள்
ADDED : அக் 01, 2025 01:21 AM

கடலுார், புதுச்சேரி, விழுப்புரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் கடலுார் ஜி.ஆர்.கே., எஸ்டேட் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. தொழிலபதிபர் ராதாகிருஷ்ணன் உருவாக்கிய ஜி.ஆர்.கே., எஸ்டேட்ட நிறுவனம் அவரது மகன் துரைராஜ், இவரது மனைவி கோமதி துரைராஜ் உழைப்பால் ஆலமராக உயர்ந்து பல்வேறு நிறுவனங்களாக உருவெடுத்துள்ளது.
கடலுார் நகருக்கு பெருமை சேர்க்கும் கிருஷ்ணாலயா தியேட்டரில் ரசிகர்கள் விருப்பதிற்கேற்ப 'கியூப்' டிஜிட்டல் என அனைத்து வசதிகளும் உள்ளன. கடலுார் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் டாடா மோட்டார்சின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான சக்ராலயா மோட்டார்சில் கார்களை துரிதமாக விற்பனை செய்கிறது.
புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் அதிநவீன தொழிநுட்ப சர்வீஸ் சென்டர் மூலம் டாடா வாகனங்களுக்கு உரிய சர்வீஸ் மையங்களை அமைத்து கார் விற்பனையில் முதன்மை பெற்று வருகிறது. புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் மகேந்திரா அன்டு மகேந்திரா கார்களின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான சங்காலயா மோட்டார்ஸ் கார் விற்பனையில் சாதனை படைத்து விருது பெற்றுள்ளது.
மகேந்திரா கார்களை சர்வீஸ் செய்து தருவதில் பாராட்டு பெற்றுள்ளது. டாடா மோட்டாஸ் மற்றும் மகேந்திரா கார்கள் ஏற்றுமதியில் இந்நிறுவனம் சாதனை படைத்து விருதுகளை பெற்றுள்ளது. கண்ணாரப்பேட்டை அருகே மலைப் பகுதிகளில் உருவாகும் சுத்தமான குடிநீரால் தயாரிக்கப்படும் 'டைவ்' மினரல் வாட்டர் ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் விற்பனையில் சாதனை படைக்கிறது.
ஜி.ஆர்.கே., எஸ்டேட் தொழில்துறையில் தமிழக அளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஜி.ஆர்.கே., எஸ்டேட்டின் மற்றொரு படைப்பான அனுமந்தாலயா மோட்டார்ஸ் நிறுவனத்தில் அனைத்து சொகுசு கார்களுக்கும் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது. சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவராக துரைராஜ் பதவி வகித்து சமூக சேவைகளை செய்கிறார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும், தொழில் துவங்கவும் கடனுதவி ஏற்பாடு செய்கிறார்.