/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜி.ஆர்.கே., குழுமம் அன்னதானம் வழங்கல்
/
ஜி.ஆர்.கே., குழுமம் அன்னதானம் வழங்கல்
ADDED : டிச 31, 2024 06:39 AM

கடலுார: கடலுாரில் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமந்த் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில், அனுமந்த் ஜெயந்தி விழா நடந்தது.
காலை 9:00 மணிக்கு மூலவர், உற்சவர் திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
இதில், ஜி.ஆர்.கே., குழும நிர்வாக இயக்குனர் துரைராஜ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். ஜி.ஆர்.கே., குழும இயக்குனர்கள் கோமதி துரைராஜ், கோகுல் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, கடலுார் செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடந்தது.
இதில், 26 அடி உயர ஆஞ்சநேயருக்கு 1008 வட மாலை, துளசி மாலை சாற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.