ADDED : நவ 18, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் பிரசாத்,33; கப்பல் ஊழியர். இவருக்கு வரும் 20ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் துாங்க சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை.
அவரது தந்தை தனசேகர் சென்று பார்த்த போது, மின்விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.